/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
உயரமான இடத்தில் விளம்பரம் கிரேன் வாயிலாக மறைப்பு
/
உயரமான இடத்தில் விளம்பரம் கிரேன் வாயிலாக மறைப்பு
ADDED : மார் 21, 2024 10:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:லோக்சபா தேர்தல் தேதி அறிவித்த நாள் முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி அந்தந்த உள்ளாட்சி நிர்வாகங்கள், பொது இடங்களில் இருந்த அரசியல் கட்சி சுவர் விளம்பரங்களை வெள்ளையடித்து, சுவரொட்டிகளை கிழித்தனர்.
சென்னை - - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், தச்சூர், புதுவாயல், கவரைப்பேட்டை, கும்மிடிப்பூண்டி, எளாவூர் ஆகிய பகுதிகளில் உள்ள மேம்பாலங்களில் உயரமான சுவர் விளம்பரங்கள் அழிக்கப்படாமல் இருந்தன.
இந்நிலையில், நேற்று கிரேன் வாயிலாக, 30 அடி உயரத்தில், உள்ள விளம்பரங்களுக்கு வெள்ளையடித்து மறைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

