/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
'நானோ' உர பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை
/
'நானோ' உர பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை
ADDED : ஜூலை 04, 2024 01:16 AM

பொன்னேரி:'இப்கோ' எனப்படும் இந்திய உழவர் உர கூட்டுறவு நிறுவனம் சார்பில், 'நானோ' உரங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், அது தொடர்பாக விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் பொன்னேரியில் நடந்தது.
இந்நிறுவனத்தின் மாநில விற்பனை மேலாளர் சுரேஷ் தலைமையில், கள அலுவலர்கள் காளிதாசன், சந்துரு மற்றும் பொன்னேரி சரக கூட்டுறவு சங்கங்களின் செயலர்கள் சசிகுமார், பாஸ்கர் ஆகியோர் பங்கேற்று விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர்.
பொன்னேரி தாலுகாவில் 'நானோ' மாதிரி கிராமங்கள் உருவாக்கப்பட்டு, 'ட்ரோன்' வாயிலாக மானிய விலையில் உரங்கள் தெளிக்கப்படும் எனவும், 'இப்கோ' நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் டாக்டர் அவஸ்தி அவர்களால், இத்திட்டம் அகில இந்திய அளவில் துவங்கி வைக்கப்பட்டுள்ளது என, விவசாயிகளிடம் தெரிவிக்கப்பட்டது.
ஆர்வமுள்ள விவசாயிகள் தங்களை இத்திட்டத்தில் இணைத்துக் கொள்ளும்படியும் அறிவுறுத்தப்பட்டது. காட்டாவூர், கம்மவார்பாளையம், மெதுார், பனப்பாக்கம், சின்னக்காவணம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து, 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் முகாமில் பங்கேற்றனர்.