/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தேர்தல் நடத்தை விதிமுறைகள் கட்சி பிரதிநிதிகளுக்கு அட்வைஸ்
/
தேர்தல் நடத்தை விதிமுறைகள் கட்சி பிரதிநிதிகளுக்கு அட்வைஸ்
தேர்தல் நடத்தை விதிமுறைகள் கட்சி பிரதிநிதிகளுக்கு அட்வைஸ்
தேர்தல் நடத்தை விதிமுறைகள் கட்சி பிரதிநிதிகளுக்கு அட்வைஸ்
ADDED : ஏப் 16, 2024 08:17 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், லோக்சபா தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள், அனைத்து கட்சியினர் கடைப்பிடிக்க வேண்டிய தேர்தல் நடத்தை விதி ஆலோசனை கூட்டம், நேற்று நடந்தது.
இதில், மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பிரபுசங்கர் பேசியதாவது:
வேட்பாளர், முதன்மை முகவர் மற்றும் வேட்பாளர் பணியாளர் ஆகியோர் தலா ஒரு வாகனம் மட்டுமே பயன்படுத்த அனுமதி வழங்கப்படும். வாகனத்திற்கான செலவு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி கணக்கில் சேர்க்கப்படும்.
அனைத்து வேட்பாளர்களும், இன்று மாலை 6:00 மணிக்குள் பிரசாரம் செய்வதை நிறுத்த வேண்டும். வெளியூரில் இருந்து வந்தவர்கள், மாலை 6:00 மணிக்கு மேல் தொகுதியில் இருக்கக் கூடாது. ஐந்து நபர்களுக்கு மேலாக ஒன்றாக செல்ல அனுமதி இல்லை.
அனைத்து வேட்பாளர் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர், தேர்தல் நாள் மற்றும் அதற்கு முந்தைய நாள் விளம்பரம் செய்ய, 48 மணி நேரத்திற்கு முன் அனுமதி பெற வேண்டும்.
ஓட்டுனர் உட்பட ஐந்து பேர் மட்டுமே வாகனத்தில் செல்ல அனுமதி உண்டு. அனுமதி பெறப்பட்ட வாகனத்தில் வாக்காளர்களை ஏற்றிச் செல்லக் கூடாது. வேறு வாகனத்தையும் பயன்படுத்தக் கூடாது.
ஓட்டுச் சாவடியிலிருந்து 100 மீட்டருக்குள் ஒலிபெருக்கி பயன்படுத்தக் கூடாது. ஒரு வேட்பாளருக்கு ஒரு முகவர் மட்டுமே அனுமதிக்கபடுவர். ஓட்டுச்சாவடிக்குள் நுழையும் போதும், வெளியில் செல்லும் போதும் சோதனைக்கு உட்படுத்துவதை எதிர்க்கக் கூடாது. ஓட்டுச்சாவடிக்குள் தண்ணீர், உணவு பொருள் கொண்டுவரக் கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

