/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அகூரில் 50 ஆண்டுகளுக்கு பின் ரேஷன் கடைக்கு சொந்த கட்டடம்
/
அகூரில் 50 ஆண்டுகளுக்கு பின் ரேஷன் கடைக்கு சொந்த கட்டடம்
அகூரில் 50 ஆண்டுகளுக்கு பின் ரேஷன் கடைக்கு சொந்த கட்டடம்
அகூரில் 50 ஆண்டுகளுக்கு பின் ரேஷன் கடைக்கு சொந்த கட்டடம்
ADDED : செப் 13, 2024 10:50 PM

திருத்தணி:திருத்தணி ஒன்றியம் அகூர் கிராமத்தில்,400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு, 600க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். இவர்கள் கடந்த, 50 ஆண்டுகளுக்கு மேலாக ரேஷன் கடைக்கு சொந்த கட்டடம் இல்லாததால், குறுகிய வாடகை கட்டடங்களில் இயங்கி வந்த ரேஷன் கடைக்கு சென்று ரேஷன் பொருட்கள் வாங்கி வந்தனர்.
மேலும், ரேஷன் பொருட்கள் இருப்பு வைப்பதற்கு போதிய வசதி இல்லாததால், மழை பெய்யும் போது பொருட்கள் மழையில் நனைந்து விடுகிறது.
இதையடுத்து, ஒவ்வொரு கிராம சபை கூட்டத்திலும், அகூர் கிராமத்திற்கு சொந்தமாக ரேஷன் கடை கட்டித்தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை மனுக்கள் கொடுத்து வந்தனர். தற்போது அகூர் கிராமத்தில் சொந்த ரேஷன் கடை கட்டடம் கட்டும் பணிகள் துரித வேகத்தில் நடந்து வருகிறது.
இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் இளங்கோ கூறியதாவது: அகூர் கிராமத்தில், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், 9.11 லட்சம் ரூபாயில் ரேஷன் கடை கட்டும் பணி நடந்து வருகிறது. அடுத்த மாதம் இறுதிக்குள் பணிகள் முழுமையாக ரேஷன் கடை கட்டி பயன்பாட்டிற்கு விடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.