/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வேளாண் இயந்திரம் பராமரிப்பு விளக்க முகாம்
/
வேளாண் இயந்திரம் பராமரிப்பு விளக்க முகாம்
ADDED : ஆக 23, 2024 07:47 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று வேளாண்மை பொறியியல் துறை சார்பில், வேளாண் இயந்திரம் மற்றும் கருவி பராமரிப்பு குறித்து, மாவட்ட அளவிலான முகாம் நடந்தது. கலெக்டர் பிரபுசங்கர் முகாமை பார்வையிட்டு கூறியதாவது:
வேளாண் இயந்திரம் மற்றும் கருவிகள் இயக்குதல், பராமரித்தல், பழுது கண்டறிதல், உதிரிபாகம் குறித்த தெளிவுரை உள்ளிட்ட தெளிவுரை மற்றும் விளக்கம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
வேளாண்மையில் பயன்படுத்தப்படும் புதிய தொழில் நுட்பங்களான கரும்பு அறுவடை இயந்திரம் மற்றும் நெல் அறுவடை இயந்திரம் ஆகியவற்றின் செயல் விளக்கமும் செய்து காண்பிக்கப்பட்டது. முகாமில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரம் குறித்த தொழில்நுட்ப விவரம் அடங்கிய கையேடு வழங்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
முகாமில் வேளாண் இணை இயக்குனர் முருகன், வேளாண் பொறியியல் துறை கண்காணிப்பு பொறியாளர் அருள் போஸ்கோ பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.