/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கேக் கடையில் ரகளை செய்த அ.தி.மு.க., பிரமுகருக்கு வலை
/
கேக் கடையில் ரகளை செய்த அ.தி.மு.க., பிரமுகருக்கு வலை
கேக் கடையில் ரகளை செய்த அ.தி.மு.க., பிரமுகருக்கு வலை
கேக் கடையில் ரகளை செய்த அ.தி.மு.க., பிரமுகருக்கு வலை
ADDED : மார் 05, 2025 11:56 PM

திருவள்ளூர், திருவள்ளூர் குண்ணவலம் பகுதியைச் சேர்ந்தவர் உமாகாந்த், 25. இவர், திருவள்ளூர் ஜே.என்.சாலையில் 'கேக் வேர்ல்டு' எனும் கடையை நடத்தி வருகிறார்.
ஒரு மாதத்திற்கு முன் வழக்கறிஞரும், அ.தி.மு.க., பிரமுகருமான ராஜேஷ் என்பவர், இவரது கடையில் கேக் வாங்கினார்.
அதற்கான பணத்தை 'கூகுள் பே' வாயிலாக அனுப்புவதாக கூறிச் சென்றார். ஆனால், பணம் அனுப்பவில்லை எனக் கூறப்படுகிறது. நேற்று முன்தினம் மாலை மீண்டும் கடைக்கு வந்த ராஜேஷ், கேக் கேட்டு உமாகாந்தை மிரட்டியுள்ளார்.
அப்போது, 'பணம் கொடுத்தால் தான் கேக் தரமுடியும்' என உரிமையாளர் தெரிவித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த ராஜேஷ், நண்பர்கள் நால்வருடன் சென்று, உமாகாந்த் மற்றும் கடையில் பணிபுரிபவர்களை ஆபாசமாக பேசி, கடையில் இருந்த கம்ப்யூட்டர், கண்ணாடி பொருட்களை அடித்து நொறுக்கினர்.
இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதுகுறித்து உமாகாந்த் அளித்த புகாரின்படி, திருவள்ளூர் நகர போலீசார் வழக்கு பதிந்து, 'சிசிடிவி' காட்சிகளை ஆய்வு செய்து விசாரிக்கின்றனர்.