/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தாமரை ஏரியை ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரை
/
தாமரை ஏரியை ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரை
ADDED : மே 16, 2024 12:43 AM

கும்மிடிப்பூண்டி:தாமரை ஏரியை சீரழித்து வரும் ஆகாய தாமரைகளை அகற்ற வேண்டும் என கும்மிடிப்பூண்டி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கும்மிடிப்பூண்டி நகரின் முக்கிய நீர் ஆதாரமான, 48 ஏக்கர் பரப்பளவு கொண்ட தாமரை ஏரி, நீர்வளத்துறையின் பராமரிப்பில் உள்ளது. கும்மிடிப்பூண்டி நகரின் நிலத்தடி நீர் மட்டத்தை குறையாமல் பாதுகாக்கும், தாமரை ஏரியை அரசு பாதுகாக்க தவறியதால், சமூக ஆவர்வலர்கள் அதிருப்திக்கு ஆளாகினர்.
எந்த துறையும் கண்டுக்கொள்ளாததால், ஏரியை சுற்றியுள்ள, திருவள்ளூர் நகர், அருண் நகர் குடியிருப்பு பகுதிகள், தொழிற்சாலைகள் மற்றும் டேங்கர் லாரிகளின் கழிவுநீர் நேரடியாக ஏரியிலும், ஏரியின் நீர் வரத்து கால்வாய்களில் திறந்து விடப்படுகிறது.
மாசு அடைந்த ஏரி நீரால், 2023ம் ஆண்டு மே மாதம், கொத்து கொத்தாக மீன்கள் செத்து மிதந்தன. சுற்றுச்சூழல் துறையினர் ஏரியில் கள ஆய்வு செய்து, தண்ணீர் மாதிரிகளை ஆய்வு கூட பரிசோதனைக்கு எடுத்த சென்றனர்.
அதன்பின் ஏரியை பாதுகாக்கும் வகையில் சம்பந்தப்பட்ட துறை சார்ந்து அலுவலர்களுக்கு, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகம் சார்பில், சில அறிவுறுத்தல்கள் அனுப்பப்பட்டன.
அதன்படி, முதல் கட்டமாக ஏரியில் படர்ந்துள்ள ஆகாய தாமரைகளை அகற்ற வேண்டும் என தெரிவித்திருந்தனர். ஆனால், இது வரை நீர்வளத்துறையினர் ஏரியில் படர்ந்துள்ள ஆகாய தாமரைகளை அகற்றவில்லை. இதனால் சமூக ஆவர்லர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். மேலும் தாமதிக்காமல், ஏரியை மூழ்கடித்த அகாய தாமரைகளை முழுமையாக அகற்றி தாமரை ஏரியை முறையாக பராமரித்து பாதுகாக்க வேண்டும் என மக்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.