/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஊத்துக்கோட்டையில் அனைத்துக்கட்சி கூட்டம்
/
ஊத்துக்கோட்டையில் அனைத்துக்கட்சி கூட்டம்
ADDED : மார் 22, 2024 09:03 PM
பெரியபாளையம்:திருவள்ளூர் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட பெரியபாளையத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடந்தது. ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி., கணேஷ்குமார் தலைமை வகித்தார். ஆய்வாளர்கள் ஏழுமலை, வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் தேர்தலை ஒட்டி கட்சியினர் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை டி.எஸ்.பி., கணேஷ்குமார் பேசினார்.
அவர் பேசியதாவது:
கட்சி கொடி கம்பங்கள் அகற்றப்பட வேண்டும். சுவர் விளம்பரத்திற்கு அதன் உரிமையாளர்களின் அனுமதி கட்டாயம் பெற வேண்டும். பிரசார வேன்களுக்கான அனுமதி பெற வேண்டும். கூம்பு வடிவ ஒலி பெருக்கி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.
பொதுக்கூட்டம் உள்ளிட்ட அனைத்து பிரசாரத்திற்கும், 48 மணி நேரத்திற்கு முன் அனுமதி பெற வேண்டும். பொதுக்கூட்டம், பிரசாரம் முடிந்த இரண்டு மணி நேரத்தில் கொடி, மேடைகள் அகற்றப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

