/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
விதி மீறும் தொழிற்சாலைகளால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிப்பு கும்மிடி கவுன்சிலர் கூட்டத்தில் குற்றச்சாட்டு
/
விதி மீறும் தொழிற்சாலைகளால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிப்பு கும்மிடி கவுன்சிலர் கூட்டத்தில் குற்றச்சாட்டு
விதி மீறும் தொழிற்சாலைகளால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிப்பு கும்மிடி கவுன்சிலர் கூட்டத்தில் குற்றச்சாட்டு
விதி மீறும் தொழிற்சாலைகளால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிப்பு கும்மிடி கவுன்சிலர் கூட்டத்தில் குற்றச்சாட்டு
ADDED : ஜூலை 03, 2024 10:23 PM
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி ஒன்றிய கவுன்சிலர் கூட்டம், சேர்மன் சிவகுமார் தலைமையில் நேற்று நடந்தது. பி.டி.ஓ.,க்கள் சந்திரசேகர், அமிழ்தமன்னன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், அலுவலக செலவு - திட்டம், அனுமதி ஆகியவற்றின் மீது, 52 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், புதுகும்மிடிப்பூண்டி, பெத்திக்குப்பம், சித்தராஜகண்டிகை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர்கள், மாசு கட்டுப்பாட்டு விதிகள் மீறி இயங்கும் தொழிற்சாலைகளால் கும்மிடிப்பூண்டி மற்றும் அதை சுற்றியுள்ள கிராம பகுதிகளின் சுற்றுச்சூழல் கடுமையாக பாதித்து வருகிறது.
'நாளுக்கு நாள் அதிகரிக்கும் சுற்றுச்சூழல் பாதிப்பு பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்' என தெரிவித்தனர். தொடர்ந்து, கவுன்சிலர்கள் சிலர் புகார்கள் மற்றும் கோரிக்கைகளை முன் வைத்தனர்.
ரவிகுமார் -- மா.கம்யூனிஸ்ட்: பெரும்பாலான தொழிற்சாலை நிர்வாகத்தினர், சமூக பாதுகாப்பு நிதியை முறையற்ற திட்டங்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
அனைத்து தரப்பு தொழிற்சாலைகளும் கலெக்டரின் நேரடி கண்காணிப்பில், அந்த நிதியை முறையாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதன்மோகன் -- காங்கிரஸ்: சித்தரகூட் மற்றும் சூரியதேவ் தொழிற்சாலைகளால், புதுகும்மிடிப்பூண்டி கிராம பகுதி முழுதும் கருந்துகள்கள் சூழ்ந்து பல்வேறு சுவாச பிரச்னைக்கு மக்கள் ஆளாகி வருகின்றனர். உரிய நடவடிக்கை எடுக்க தவறினால், மக்கள் அனைவரும் போராட்டம் மேற்கொள்ள இருக்கின்றனர்.
தொழிற்சாலைக்கான அனுமதி வழங்கும் அதிகாரம் ஊராட்சி நிர்வாகத்திற்கு இல்லாத நிலையில், புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி நிர்வாகத்தின் அத்துமீறல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சீனிவாசன் -- தி.மு.க.,: புதுகும்மிடிப்பூண்டி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவி வருவதால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டு துவங்கிய நிலையில், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும்.
சங்கர் -- பா.ம.க.,: கும்மிடிப்பூண்டி தாமரை ஏரியில் தொழிற்சாலைகளின் கழிவுநீர் கலந்து ஏரி முழுதும் தேங்கி நிற்கிறது. பெத்திக்குப்பம் மேம்பாலத்தின் பக்கவாட்டில் உள்ள நடைபாதை படிகளில் சமூக விரோத செயல்கள் நடப்பதால், பாதசாரிகள் கடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதை கட்டுப்படுத்த போலீசார் தினமும் ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும்.
கவுன்சிலர்களின் கோரிக்கை மீது தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என, சேர்மன் சிவகுமார் தெரிவித்தார்.