sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

* திருத்தணி முருகன் கோவிலுக்கு மாற்று பாதை...ரூ.100 கோடி:* சிறுவாபுரியில் நான்குவழிச் சாலை திட்டம்

/

* திருத்தணி முருகன் கோவிலுக்கு மாற்று பாதை...ரூ.100 கோடி:* சிறுவாபுரியில் நான்குவழிச் சாலை திட்டம்

* திருத்தணி முருகன் கோவிலுக்கு மாற்று பாதை...ரூ.100 கோடி:* சிறுவாபுரியில் நான்குவழிச் சாலை திட்டம்

* திருத்தணி முருகன் கோவிலுக்கு மாற்று பாதை...ரூ.100 கோடி:* சிறுவாபுரியில் நான்குவழிச் சாலை திட்டம்


ADDED : ஜன 22, 2025 08:05 PM

Google News

ADDED : ஜன 22, 2025 08:05 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர் மாவட்டத்தில், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் விதமாக, திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு, 55 கோடி ரூபாயில் புதிய மாற்று பாதையும், சிறுவாபுரியில், 45 கோடி ரூபாய் செலவில், புதிய நான்குவழிச் சாலையும் அமைக்கப்பட உள்ளது. இதற்கான ஆய்வு மேற்கொண்ட, நெடுஞ்சாலை துறை அமைச்சர் வேலு, ''நெரிசலுக்கு தீர்வு காணும் திட்டப் பணிகள் வரும் டிசம்பருக்குள் முடிக்கப்படும்,'' என, உறுதி அளித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், ஆரணி அடுத்த, சின்னம்பேடு கிராமத்தில், சிறுவாபுரி முருகன் கோவில் அமைந்துள்ளது. செவ்வாய், ஞாயிறு, விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில், பல ஆயிரம் பக்தர்கள், முருகனை தரிசிக்க வருகின்றனர்.

பக்தர்களுக்கு, போக்குவரத்து நெரிசல் பெரும் சவாலாக உள்ளது. சின்னம்பேடு கிராமத்தில், மக்கள் வசிக்கும் பகுதிக்கு இடையே குறுகலாக செல்லும் ஒருவழிச் சாலையில், எதிர் எதிரே வாகனங்கள் செல்ல முடியாமல் திணறுகின்றன. செவ்வாய் மற்றும் விசேஷ நாட்களில், 3 கி.மீ., துாரம் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. தரிசன நேரத்தை விட, நெரிசலில் இருந்து விடுபட அதிகம் நேரம் ஆவதால், இதற்கு தீர்வு காண வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு காண, புதிய நான்குவழிச் சாலை அமைக்க, ஹிந்து சமய அறநிலைய துறை முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக, பொதுப்பணித் துறை அமைச்சர் வேலு, ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நாசர் ஆகியோர் கொண்ட அமைச்சர் குழு நேற்று, சிறுவாபுரியில் நான்கு வழிச்சாலை அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

டிசம்பரில் முடியும்


அதேபோல, திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு வரும் பக்தர்கள், வாகனங்களில் மலைக்கோவிலுக்கு வருவதால், மலைப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கோவிலுக்கு செல்ல ஒரு மலைப்பாதை மட்டுமே இருப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதையடுத்து, பக்தர்கள் நலன்கருதி,இரண்டாவது மாற்று மலைப்பாதை அமைக்க, அமைச்சர் சேகர்பாபு முயற்சி மேற்கொண்டார். இதற்காக, மேல்திருத்தணியில் இருந்து மலைக்கோவிலுக்கு மாற்று மலைப்பாதை ஏற்படுத்த, வனத்துறை மற்றும் தனிநபர்களிடம் இருந்து கோவில் நிலம் கையகப்படுத்தும் பணி நடந்தது.

இந்நிலையில், அமைச்சர்கள் வேலு, சேகர்பாபு, நாசர் ஆகிய மூன்று அமைச்சர்கள் குழு நேற்று, திருத்தணி மலைக்கோவிலுக்கு வந்தனர். பின், மாற்றுப்பாதை அமையும் இடத்தை பார்வையிட்டனர்.

அப்போது, பக்தர்கள் வசதிக்காக, திருத்தணி ரயில் நிலையத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு இலவச பேருந்து சேவை, கோட்ட ஆறுமுக சுவாமி கோவில் வளாகத்தில், 99 லட்சம் ரூபாயில் கட்டப்பட்டுள்ள தவில் மற்றும் நாதஸ்வர இசை பயிற்சி பள்ளியியை அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.

பின், அமைச்சர் வேலு கூறியதாவது:

சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, சிறுவாபுரி கோவில் வழியாக ஆரணி -- புதுவாயல் நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில், 4.6 கி.மீ., நான்குவழிச் சாலை அமைய உள்ளது. இதற்காக, அறநிலையத் துறை சார்பில், 45 கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளது. புதிய சாலைக்காக, 30 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணி, இரு மாதங்களில் முடிக்கப்படும். அடுத்த ஆறு மாதத்திற்குள், புதிய சாலை அமைத்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

திருத்தணி முருகன் கோவில் மலைப்பாதை நெரிசலை தடுக்க, கோவிலின் மேற்கு பகுதி மேல்திருத்தணியில் இருந்து மலைக்கோவிலுக்கு இரண்டாவது மலைப்பாதை அமைக்கப்பட உள்ளது.

இது தொடர்பாக, நெடுஞ்சாலைத் துறை, ஓராண்டு காலமாக ஆய்வு நடத்தியது. மேல்திருத்தணி - சித்துார் சாலையிலிருந்து மலைக் கோவிலுக்கு, தரைப்பகுதியில் 900 மீட்டர், மலைப்பகுதியில் 1,100 மீட்டர் என, 2 கி.மீ., துாரத்திற்கு சாலை அமைக்கப்பட உள்ளது.

இதற்காக, 1.28 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம், 6.77 ஏக்கர் தனியார், 6.72 ஏக்கர் வனத்துறை நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கு, 1.92 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளன. இந்த சாலை அமைக்க தேவையான, 55 கோடி ரூபாயை நெடுஞ்சாலைத்துறைக்கு, அறநிலையத் துறை 'டிபாசிட்' செய்துள்ளது.

சாலை அமைக்கும் பணிக்கு பிப்ரவரியில் டெண்டர் விடப்பட்டு, இந்தாண்டு டிசம்பருக்குள் மக்கள் பயன்பாட்டுக்கு விடப்படும்.

இவ்வாறு அமைச்சர் வேலு கூறினார்.

நிகழ்வில், திருவள்ளூர் கலெக்டர் பிரபு சங்கர், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கும்மிடிப்பூண்டி கோவிந்தராஜன், திருத்தணி சந்திரன், ஹிந்து சமய அறநிலைய துறை முதன்மை செயலர் சந்தரமோகன், ஆணையர் ஸ்ரீதர், கூடுதல் ஆணையர் சுகுமார், தலைமைப் பொறியாளர் பெரியசாமி, நெடுஞ்சாலைத்துறை சிறப்பு தொழில்நுட்ப வல்லுநர் சந்திரசேகரன், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், இணை ஆணையர்கள் குமாரதுரை, ரமணி, நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் செல்வகுமார், கோட்டப் பொறியாளர் சிற்றரசு உட்பட பலர் உடனிருந்தனர்.

- நமது நிருபர் குழு -






      Dinamalar
      Follow us