/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அம்பத்துார் மகளிர் ஐ.டி.ஐ.,யில் மாணவியர் சேர்க்கை நீட்டிப்பு
/
அம்பத்துார் மகளிர் ஐ.டி.ஐ.,யில் மாணவியர் சேர்க்கை நீட்டிப்பு
அம்பத்துார் மகளிர் ஐ.டி.ஐ.,யில் மாணவியர் சேர்க்கை நீட்டிப்பு
அம்பத்துார் மகளிர் ஐ.டி.ஐ.,யில் மாணவியர் சேர்க்கை நீட்டிப்பு
ADDED : ஜூலை 20, 2024 06:13 AM
திருவள்ளூர்: திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
சென்னை, அம்பத்துார் அரசினர் மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில், காலி இடங்களுக்கு மாணவியர் நேரடி சேர்க்கை வரும் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எட்டாம் வகுப்பு, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாதோர் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு இல்லை.
இங்கு, தையல் தொழிற்நுட்பம், 'கோபா', கட்டடப்பட வரைவாளர், 'ஸ்டெனோகிராபி' ஆகிய நான்கு பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. அவர்கள் அனைவரும் அரசின் அனைத்து சலுகைகளும் கிடைக்கும்.
விண்ணப்பதாரர் மதிப்பெண், மாற்று சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் - 5 ஆகியவற்றை நேரில் வர வேண்டும்.