/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வெயிலில் மயங்கி விழுந்து முதியவர் பலி
/
வெயிலில் மயங்கி விழுந்து முதியவர் பலி
ADDED : மே 07, 2024 08:05 PM
திருத்தணி:ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் தாலுகா குருவராஜபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் எல்லப்பன், 67. இவர் நேற்று மதியம் திருத்தணி நகருக்கு வந்தார்.
அங்கு ம.பொ.சி.சாலை ஓரமாக நடந்து சென்றார்.
அப்போது வெயில் கொளுத்தியதில் திடீரென எல்லப்பன் மயங்கி சாலையோரம் விழுந்தார். அவ்வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், எல்லப்பன் இறந்துவிட்டார் என தெரிவித்தனர். திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கடந்த, 4ம் தேதி திருத்தணி இந்திரா நகர் பகுதி சேர்ந்த, ரமாபிரபா, 54 என்பவர் திருத்தணி பஜாருக்கு செல்வதற்காக
அரக்கோணம் சாலையில் நடந்து வந்த போது வெயிலில் மயங்கி விழுந்து சம்பவ இடத்திலயே இறந்தார் என்பது குறிப்பிடதக்கது.

