/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திறந்து கிடக்கும் பாதாள சாக்கடை மூடி வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து
/
திறந்து கிடக்கும் பாதாள சாக்கடை மூடி வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து
திறந்து கிடக்கும் பாதாள சாக்கடை மூடி வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து
திறந்து கிடக்கும் பாதாள சாக்கடை மூடி வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து
ADDED : மே 25, 2024 01:32 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் பெரியகுப்பம்-மணவாள நகர் சாலையில் திறந்து கிடக்கும் பாதாள சாக்கடை மூடி திறந்து கிடப்பதால், வாகன ஓட்டிகள் அச்சப்பட்டு வருகின்றனர்.
சென்னையில் இருந்து திருத்தணி, திருப்பதி செல்லும் அனைத்து வாகனங்களும் திருவள்ளூர் வழியாக சென்று வருகின்றன.
மணவாள நகரில் இருந்து பெரியகுப்பம், அம்பேத்கர் சிலை வழியாக, ஜே.என்,.சாலையில் கடந்து, கலெக்டர் அலுவலகம் வழியாக சென்று வருகின்றன.
இந்நிலையில், பெரியகுப்பம் மாநில நெடுஞ்சாலை துறை அலுவலகம் எதிரில், பாதாள சாக்கடை அடைப்பை நகராட்சி நிர்வாகம் கடந்த சில வாரங்களுக்கு முன் துவங்கியது. ஆனால், அப்பணியை அவசரகதியில் நடத்தி, பாதாள சாக்கடை மூடியை திறந்த நிலையில் வைத்துள்ளனர்.
இதனால், வாகன ஓட்டிகள் கடும் அச்சத்தில் சென்று வருகின்றனர். எனவே, நகராட்சி நிர்வாகம் திறந்த நிலையில் உள்ள பாதாள சாக்கடை மூடியை நிரந்தரமாக மூட வேண்டும் என மாவட்ட கலெக்டருக்கு வலியுறுத்தி உள்ளனர்.