/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
'பார்க்கிங்' ஏரியா ஆன புறக்காவல் நிலையம்
/
'பார்க்கிங்' ஏரியா ஆன புறக்காவல் நிலையம்
ADDED : ஆக 07, 2024 02:40 AM

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தின் தலைமையிடமாக உள்ள ஆர்.கே.பேட்டையில் இதுவரை பேருந்து நிலையம் இல்லை. பேருந்து நிலையமாக செயல்பட்டு வரும் பஜார் பகுதியில் பயணியர் நிழற்குடையும் இல்லை.
இந்நிலையில், இந்த பஜார் பகுதியை கடந்த தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன.
பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர், இங்கிருந்து பேருந்து பயணம் மேற்கொள்கின்றனர்.
இந்நிலையில், பஜார் முச்சந்தியில் உள்ள புறக்காவல் நிலையத்தின் முன்பாக இருசக்கர வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதில், போலீசாரின் வாகனங்களும் இடம்பெறுகின்றன. இதனால், வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் நெரிசலில் சிக்கி திணறுகின்றனர்.
புறக்காவல் நிலையத்தை ஒட்டி சாலை திருப்பத்தில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் ஒன்று நேற்று முன்தினம் பள்ளி வாகனம் ஒன்று மோதியதில் சேதமடைந்தது.
பஜார் மற்றும் அதையொட்டிய பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற போலீசார் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பேருந்து நிலையத்தில் பயணியர் காத்திருக்க நிழற்குடை அமைக்க வேண்டும் எனவும் பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.