/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கோடைக்கால முன்னெச்சரிக்கை ஆந்திர அரசு விடுக்கும் 'அலெர்ட்'
/
கோடைக்கால முன்னெச்சரிக்கை ஆந்திர அரசு விடுக்கும் 'அலெர்ட்'
கோடைக்கால முன்னெச்சரிக்கை ஆந்திர அரசு விடுக்கும் 'அலெர்ட்'
கோடைக்கால முன்னெச்சரிக்கை ஆந்திர அரசு விடுக்கும் 'அலெர்ட்'
ADDED : மார் 10, 2025 12:10 AM

கும்மிடிப்பூண்டி, பல லட்சம் மக்களை பலி வாங்கிய, 2004ம் ஆண்டு சுனாமி பேரிடரை தொடர்ந்து, நம் நாட்டில் 2005ம் ஆண்டு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் ஏற்படுத்தப்பட்டது. அதே ஆண்டே, பேரிடர் மேலாண்மை சட்டமும் இயற்றப்பட்டது.
மோசமான வானிலை மற்றும் பேரிடர் காலங்களில் மக்களை பாதுகாக்கும் முனைப்போடு, அனைத்து மாநிலங்களிலும் பேரிடர் மேலாண்மை ஆணையம் ஏற்படுத்தப்பட்டது.
அந்த ஆணையத்தின் வாயிலாக விழிப்புணர்வு, முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு மீதான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மொபைல்போன்களில் வானிலை முன்னெச்சரிக்கை தகவல் அளிக்கும் முறையும் அதில் ஒன்று. அதை அறிமுகப்படுத்தும் விதமாக, 2023ம் ஆண்டு நாடு முழுதும், அனைத்து மொபைல்போன்களுக்கும் பரிசோதனை முறையில் 'சாம்பிள்' தகவல் அனுப்பப்பட்டது.
அதன்பின், வானிலை எச்சரிக்கை தகவல்கள் குறித்த அலெர்ட் தகவல்கள்மொபைல்போன்களில் அனுப்பப்பட்டு வருகின்றன. தற்போது நிலவி வரும் கோடை வெப்பத்தில்மக்களை பாதுகாக்கும் நோக்கில், அண்டை மாநிலமான ஆந்திராவில், மொபைல் போன்களில் அலெர்ட் தகவல்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.
ஆந்திர எல்லைக்கு உட்பட்ட அனைத்து மொபைல்போன்களிலும் அபாய ஒலியுடன் தெலுங்கு மொழியில் முன்னெச்சரிக்கை விடுக்கப்படுகிறது. அதில் வரும் 'ஓ.கே.,' பட்டனை அழுத்தும் வரை அபாய ஒலி ஒலித்துக் கொண்டிருக்கிறது.
அந்த தகவலில்,'வீட்டுச் சூழலை குளிர்ச்சியாக வைத்திருப்பதற்கு, கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்' குறித்து கூறப்பட்டுள்ளது. கோடைக்காலத்தில் இத்தகவல் பயனுள்ளதாக இருப்பதாக ஆந்திர மக்கள் தெரிவிக்கின்றனர்.