/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நுாலகத்தில் செயல்படும் அங்கன்வாடி மையம்
/
நுாலகத்தில் செயல்படும் அங்கன்வாடி மையம்
ADDED : பிப் 24, 2025 11:55 PM

திருவாலங்காடு, திருவாலங்காடு ஒன்றியம், பழையனுார் கிராமத்தில், முத்திரையர் தெருவில், அங்கன்வாடி மையம் அமைந்துள்ளது. இங்கு, 25 குழந்தைகள் பயில்கின்றனர்.
மேலும், கர்ப்பிணியர், பாலுாட்டும் பெண்கள் என, சுமார் 30 பேர் இணை உணவு மற்றும் ஊட்டச்சத்து பரிசோதனையால் பயனடைந்து வருகின்றனர். பழைய அங்கன்வாடி மைய கட்டடம், 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதால், பழுதடைந்து விபத்து ஏற்படும் அபாய நிலையில் இருந்தது.
இதனால், முன்னெச்சரிக்கையாக, இரண்டு ஆண்டுகளுக்கு முன் இடித்து அகற்றப்பட்டது. தற்போது, அங்கன்வாடி மையம், அதே பகுதியில் உள்ள கிராம நுாலக கட்டடத்தில் செயல்படுகிறது. அங்கு, போதிய இடவசதி இல்லாததால், பெற்றோர் குழந்தைகளை அங்கன்வாடி மையத்திற்கு அனுப்ப தயக்கம் காட்டுகின்றனர்.
இந்நிலையில், அங்கன்வாடி மைய கட்டடம் கட்ட அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் பெற்றோர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, புதிய அங்கன்வாடி மைய கட்டடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குழந்தைகளின் பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

