/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
டி.ஆர்.எஸ்., குளோபல் பள்ளியில் ஆண்டு விழா
/
டி.ஆர்.எஸ்., குளோபல் பள்ளியில் ஆண்டு விழா
ADDED : மார் 02, 2025 12:08 AM

திருத்தணி, திருத்தணி ஒன்றியம் அகூர் - -நத்தம் செல்லும் சாலையில், டி.ஆர்.எஸ்., குளோபல் பப்ளிக் சி.பி.எஸ்.இ., பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியின் ஆண்டு விழா, கிருஷ்ணா கல்வி குழுமத்தின் தலைவர் டி.ஆர்.சுப்ரமணியம் தலைமையில் நடந்தது.
பள்ளி தாளாளர் டி.எஸ்.ரவிகுமார் முன்னிலை வகித்தார். முதல்வர் கிறிஷ்டிணா வரவேற்றார். இதில், சிறப்பு விருந்தினர்களாக எழுத்தாளர் லேனா தமிழ்வாணன், நடிகை தீபா சங்கர் ஆகியோர் பங்கேற்று, பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- - மாணவியருக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கினர்.
மேலும், பள்ளி அளவில் நடந்த தேர்வு மற்றும் காலாண்டு, அரையாண்டு ஆகிய தேர்வுகளில், முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ - மாணவியருக்கு கோப்பை மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து, மாணவர்களின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தன. விழா ஏற்பாடுகளை நிர்வாக இயக்குநர்கள் சுரேஷ், ராஜாராமன் மற்றும்உடற்கல்வி ஆசிரியர் நந்தகுமார் ஆகியோர் செய்திருந்தனர். பெற்றோருக்கு இடையே போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் பங்கேற்றனர்.