/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
காத்திருப்பு வண்டல் மண் எடுக்க விவசாயிகள் கால அவகாசம் கேட்டு விண்ணப்பம்
/
காத்திருப்பு வண்டல் மண் எடுக்க விவசாயிகள் கால அவகாசம் கேட்டு விண்ணப்பம்
காத்திருப்பு வண்டல் மண் எடுக்க விவசாயிகள் கால அவகாசம் கேட்டு விண்ணப்பம்
காத்திருப்பு வண்டல் மண் எடுக்க விவசாயிகள் கால அவகாசம் கேட்டு விண்ணப்பம்
ADDED : ஆக 21, 2024 09:35 PM
திருவாலங்காடு:திருத்தணி தாலுகாவில் வண்டல் மண் எடுக்க விண்ணப்பித்துள்ள விவசாயிகள் காத்திருக்கின்றனர். மண் எடுக்க கால அவகாசம் வேண்டுமென விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டில் ஏரி, குளங்கள் என நூற்றுக்கணக்கான நீர்நிலைகள் உள்ளன.
முறையாக துார்வாரி, கரைகளை பலப்படுத்தினால் மட்டுமே பருவ மழைநீரை வீணடிக்காமல் சேமிக்க முடியும்.
அதுபோல், வெள்ள காலங்களில் மழைநீர் வீணாக கடலில் கலக்காமல், நீர்நிலைகளில் சேமித்தால் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.
இதனால் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் பூர்த்தியாகும். இதை கருத்தில் கொண்டு ஏரி, குளங்களில் வண்டல் மண் எடுத்துக்கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
இதன் மூலம் பொதுமக்கள் மற்றும் விவசாய பயன்பாட்டிற்கு வண்டல் மண் எடுக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக திருத்தணி தாலுகாவில் உள்ள ஏரிகளில் வண்டல் மண் எடுக்க 14 விவசாயிகள் விண்ணப்பித்து காத்திருக்கின்றனர்.
தற்போது ஏரிகளில் மழைநீர் நிரம்பி உள்ளதால் அவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேலும் அனுமதி கிடைத்தாலும் குறித்த காலத்தில் மண் எடுக்க முடியாத நிலை உள்ளதாக குமுறுகின்றனர். தற்போது விண்ணப்பித்து மண் எடுக்க அனுமதி கிடைத்தால் ஒருமாத கால அவகாசத்தில் மண் எடுக்க வேண்டும் என்ற விதி உள்ளதால், மழைநீர் நீர்நிலைகளில் உள்ளதால் மண் எடுக்க முடியாத சூழல் உள்ளது. எனவே மண் எடுக்க கால நீடிப்பை திருவள்ளூர் கலெக்டர் பிரபு சங்கர் வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விண்ணப்பிக்கலாம்
திருவள்ளுர் மாவட்ட விதைச்சான்று மற்றும் உயிர்மச்சான்று உதவி இயக்குனர் எஸ்.ஸ்ரீதேவி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
மத்திய அரசின் தேசிய உயிர்ம வேளாண்மை செயல்திட்ட வழிமுறைகளின்படி திருவள்ளுர் மாவட்டத்தில் உயிர்மச்சான்று செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகள், தனிநபராகவோ, குழுவாகவோ, வணிக நிறுவனமாகவோ பதிவு செய்து கொள்ளலாம். உயிர்ம விளைபொருட்களை பதன் செய்வோரும் ஏற்றுமதி செய்வோரும் பதிவு செய்யலாம்.
தனிநபர் சிறு, குறு விவசாயிகளுக்கு 2,700, தனிநபர் பிற விவசாயிகளுக்கு 3,200, குழுவாக பதிவு செய்தால் 7,200 மற்றும் வணிக நிறுவனமாக பதிவு செய்தால் 9,400 ரூபாய் பதிவு கட்டணமாக செலுத்த வேண்டும்.
உயிர்மச்சான்றளிப்பிற்கு விண்ணப்பிக்கும் விவசாயிகள், விண்ணப்பப் படிவம், நிரந்தர கணக்கு எண் அட்டை நகல், ஆதார் அட்டை நகல், பண்ணையின் பொது விவர குறிப்பு, பண்ணையின் வரைபடம், மண் மற்றும் நீர் பரிசோதனை விவரங்கள், ஆண்டு பயிர் திட்டம், துறையுடனான ஒப்பந்தம், சிட்டா நகல் ஆகியவற்றை மூன்று நகல்களிலும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் இரண்டுடன் சமர்ப்பிக்க வேண்டும்.
மேற்காணும் விண்ணப்பப் படிவங்களை www.tnocd.net என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு திருவள்ளுர், பெரியகுப்பம், லால் பகதுார் சாஸ்திரி தெருவில் உள்ள விதைச்சான்று மற்றும் உயிர்மச்சான்று உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.