/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
விவசாயிகள் தனித்துவ எண் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
/
விவசாயிகள் தனித்துவ எண் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
விவசாயிகள் தனித்துவ எண் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
விவசாயிகள் தனித்துவ எண் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : மார் 04, 2025 12:58 AM
திருவள்ளூர், திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பெற, இ ---சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம்.
திருவள்ளூர் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் கலாதேவி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில் வேளாண் அடுக்ககம் திட்டத்தின் கீழ், விவசாயிகளின் தரவுகளை சேகரித்து தனித்துவமான அடையாள எண் பதிவு செய்யும் பணி இ- - சேவை மையத்தில் நடைபெற்று வருகிறது.
மாவட்டத்தில் விவசாயிகளின் தரவுகள் சேகரிக்கப்பட்டு இதுவரை 33,710 விவசாயிகளுக்கு தனித்துவமான அடையாள எண் வழங்கப்பட்டு உள்ளது.
மாவட்டத்தில் உள்ள அனைத்து பொது இ- -சேவை மையங்களிலும் விவசாயிகளுக்கான தரவுகள் இணைக்கப்பட்டு தனித்துவ அடையாள எண் வழங்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.
இதுவரை தனித்துவமான அடையாள எண் பெறாத விவசாயிகள் வரும் 31ம் தேதிக்குள் தங்களது பட்டா, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி ஆகியவற்றை தங்களது கிராமங்களில் நடைபெறும் முகாம்கள்; தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் அல்லது இ-சேவை மையங்களிலோ இணைத்து தனித்துவமான அடையாள எண்ணை எவ்வித கட்டணமுமின்றி பெற்றுக்கொள்ளலாம்.
தனித்துவமான அடையாள எண் பெற்றுள்ள விவசாயிகளுக்கு மட்டுமே இனிவரும் காலங்களில் இயற்கை இடர்பாடுகளின் போது பயிர்களுக்கான நிவாரணத்தொகை உள்ளிட்ட அனைத்து அரசு உதவிகளும் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.