/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சட்ட உதவி பாதுகாப்பு அலுவலக பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்
/
சட்ட உதவி பாதுகாப்பு அலுவலக பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்
சட்ட உதவி பாதுகாப்பு அலுவலக பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்
சட்ட உதவி பாதுகாப்பு அலுவலக பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்
ADDED : ஆக 25, 2024 11:06 PM
திருவள்ளூர்: திருவள்ளூர் சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை அமைப்பு அலுவலக பணியிடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.
திருவள்ளூர் மாவட்ட முதன்மை நீதிபதி ஜூலியட் புஷ்பா விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
திருவள்ளூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் கீழ், சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை அமைப்பு செயல்பட்டு வருகிறது.
இந்த அமைப்பின் அலுவலகத்திற்கு, துணை தலைமை சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர், உதவி சட்ட பாதுகாப்பு ஆலோசகர், பியூன் ஆகிய பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
பணியிடம், தகுதி, விண்ணப்ப படிவம் குறித்த தகவலை, https://districts.ecourts.gov.ih/tiruvallur என்ற இணைய தளத்தில் பதவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இப்பணிக்கு, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், வரும் செப்., 18க்குள், தலைவர், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், திருவள்ளூர் என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது பதிவு தபாலிலோ அனுப்பி வைக்கவும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.