/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அரக்கோணம் - கடப்பா ரயில் பழுது திருத்தணியில் ஒரு மணி நேரம் நிறுத்தம்

ADDED : மார் 11, 2025 12:09 AM

திருத்தணி, ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலைய சந்திப்பில் இருந்து திருத்தணி, பொன்பாடி, நகரி, ஏகாம்பரக்குப்பம், புத்துார், ரேணிகுண்டா ரயில் நிலைய சந்திப்பு வழியாக, கடப்பா ரயில் நிலையம் வரை தினமும் பயணியர் ரயில் இயக்கப்படுகிறது.
இதில், அரசு மற்றும் தனியார் அலுவலக ஊழியர்கள், கல்லுாரி மாணவர்கள், வியாபாரிகள், திருப்பதி திருமலைக்கு செல்லும் பக்தர்கள் என, பலதரப்பினர் பயணம் செய்கின்றனர்.
நேற்று காலை 7:00 மணிக்கு, அரக்கோணம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட பயணியர் ரயில், காலை 7:25 மணிக்கு திருத்தணிக்கு வந்தது. பின், ரயிலை இயக்க முயன்ற போது, பிரேக் பழுதானது தெரியவந்தது.
இதையடுத்து, திருத்தணி ரயில் நிலைய மேலாளர் மற்றும் ஊழியர்கள், அரக்கோணம் ரயில் நிலையத்தில் உள்ள தொழில்நுட்ப வல்லுநர்களை வரவழைத்து, ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பின் பிரேக்கை சரிசெய்தனர்.
இதை தொடர்ந்து, காலை 8:30 மணிக்கு, திருத்தணியில் இருந்து கடப்பாவுக்கு ரயில் புறப்பட்டு சென்றது. இதனால், பயணியர் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். சில பயணியர், திருத்தணியில் இருந்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வாயிலாக சென்றனர்.