/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆரணி ஆற்றின் கரை பலப்படுத்தும் பணி...துரிதம்!: ரூ.23.65 கோடியில் முழுவீச்சில் நடக்கிறது
/
ஆரணி ஆற்றின் கரை பலப்படுத்தும் பணி...துரிதம்!: ரூ.23.65 கோடியில் முழுவீச்சில் நடக்கிறது
ஆரணி ஆற்றின் கரை பலப்படுத்தும் பணி...துரிதம்!: ரூ.23.65 கோடியில் முழுவீச்சில் நடக்கிறது
ஆரணி ஆற்றின் கரை பலப்படுத்தும் பணி...துரிதம்!: ரூ.23.65 கோடியில் முழுவீச்சில் நடக்கிறது
ADDED : செப் 11, 2024 01:21 AM

கும்மிடிப்பூண்டி:ஊத்துக்கோட்டை முதல் பெருவாயல் வரையிலான ஆரணி ஆற்றில், கடந்த ஆண்டு வெள்ளப்பெருக்கு ஏற்படுத்திய, பாதிப்புகளுக்கு தீர்வு காணும் விதமாக, 23.65 கோடி ரூபாய் செல்வில், கரைகள் மற்றும் ஏ.என்.குப்பம் அணைக்கட்டை பலப்படுத்தும் பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
திருவள்ளூர் மாவட்டத்தில், கடந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை மற்றும் மிக்ஜாம் புயலின் போது, ஆரணி மற்றும் கொற்றலை ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு ஏராளமான பாதிப்புக்களை உண்டாக்கியது. மேற்கண்ட இரு ஆறுகள் உட்பட, திருவள்ளூர் மாவட்டத்தில், வெள்ள பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் சீரமைப்பு மற்றும் பலப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள, தமிழக அரசு, 350 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, இரு மாதங்களுக்கு முன் பணிகள் துவங்கப்பட்டன.
அதன் ஒரு பகுதியாக, ஊத்துக்கோட்டை முதல் பெருவாயல் வரையிலான, 34.5 கி.மீ., நீள ஆரணி ஆற்றில், 23.65 கோடி ரூபாய் செலவில், நீர்வளத்துறையினர் முழு வீச்சில் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இடைப்பட்ட பகுதியில் உள்ள ஏ.என்.குப்பம் அணைக்கட்டில், 2015ம் ஆண்டு வெள்ளப் பெருக்கின் போது, அணைக்கட்டில் பதிக்கப்பட்டிருந்த பெரிய அளவிலான கற்கள் பெயர்ந்தன. அதனால், அணைக்கட்டின் அடிப்பகுதியில் விரிசல்கள் பல கண்டு தண்ணீர் கசிவு ஏற்பட்டு, மழைநீரை சேமிக்க முடியாத நிலை இருந்தது. மேலும் அணைக்கட்டு மற்றும் அதனை ஒட்டியுள்ள கரை பகுதிகள் பலவீனமான நிலையில் இருந்தன.
ஏ.என்.குப்பம் அணைக்கட்டு
இந்நிலையில், ஆரணி ஆற்றின் கரை பலப்படுத்தும் பணிகளுடன் ஏ.என்.குப்பம் அணைக்கட்டை சீரமைக்கும் பணிகளும் நடந்து வருகிறது. ஏ.என்.குப்பம் அணைக்கட்டில் பெயர்ந்த பெரிய அளவு கற்களை முற்றிலும் அகற்றி மீண்டும் பதித்து வருகின்றனர். அணைக்கட்டு பகுதியை மேலும் உறுதியாக்கும் விதமாக, அணைக்கட்டு ஒட்டியுள்ள கரையோரத்தில் தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
அதனுடன், 34.5 கி.மீட்டர் நீள ஆரணி ஆற்றில் கரை உடைப்பு ஏற்பட்ட இடங்களில், தடுப்பு சுவர் அமைத்தும், கரையின் உயரம் குறைவாக உள்ள இடங்களில் கரை உயர்த்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மொத்தம், 2,450 மீட்டர் நீள தடுப்பு சுவரும், 8 கி.மீ., நீள கரையை உயர்த்தி பலப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. அனைத்து பணிகளும் துரிதமாக மேற்கொண்டு, வடகிழக்கு பருவ மழைக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இது குறித்து சம்பந்தப்பட்ட நீர்வளத்துறை பொறியாளர் ஒருவர் கூறுகையில், ‛ கலெக்டர் பிரபுசங்கர், ஆய்வு செய்தபின், இம்மாதம், 30ம் தேதிக்குள் பணிகளை முடிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி பணிகள் அனைத்தும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இம்மாத இறுதிக்குள் பணிகள் நிறைவு பெறும்' என்றார்.