/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு கைதிக்கு திடீர் நெஞ்சு வலி
/
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு கைதிக்கு திடீர் நெஞ்சு வலி
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு கைதிக்கு திடீர் நெஞ்சு வலி
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு கைதிக்கு திடீர் நெஞ்சு வலி
ADDED : ஆக 26, 2024 11:01 PM
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு கைதிக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதால், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சி யின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், சென்னை பெரம்பூரைச் சேர்ந்த திருமலை,45 என்பவரும் கைதாகி பூந்தமல்லி கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு நேற்று காலை, திடீரென நெஞ்சுலி ஏற்பட்டுள்ளது. இதனால், அவரை சிறை காவலர்கள் பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு முதல் உதவி அளித்த பின், மேல் சிகிச்சைக்காக, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டார். அங்கு கைதிகளுக்கான வார்டில் திருமலைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.