ADDED : மார் 02, 2025 11:49 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர், தமிழக சட்டசபையின் உறுதிமொழி குழுவினர், திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை ஆய்வு செய்ய உள்ளனர்.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
தமிழக சட்டசபை பேரவையின் 2024- - 25ம் ஆண்டிற்கான 12 உறுப்பினர்கள் கொண்ட அரசு உறுதிமொழி நியமிக்கப்பட்டு உள்ளது. இக்குழு, வேல்முருகன் தலைமையில் கொண்ட உறுப்பினர்கள், திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை ஆய்வு செய்ய வருகின்றனர்.
இதில், மாவட்டத்தில் நிலுவையில் உள்ள உறுதிமொழிகளுள் நிறைவேற்றப்பட்டவை, பணிகள் நடைபெற்று வருபவை குறித்து நேரில் சென்று கள ஆய்வு மேற்கொள்கின்றனர்.
மதியம், 2:00 மணியளவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில், அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம்நடத்தப்பட உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.