/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
துணை மின்நிலையம் அமைக்க நிலம் வழங்குவதாக உறுதி
/
துணை மின்நிலையம் அமைக்க நிலம் வழங்குவதாக உறுதி
ADDED : ஜூலை 03, 2024 10:24 PM
திருத்தணி:திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஒன்றியம், சின்னகடம்பூர் கிராமம் அருகே, புதிதாக, 230 கி.வோ., திறன் உடைய துணை மின் நிலையம் அமைக்க, திருத்தணி மின் வாரிய செயற்பொறியாளர், வருவாய் துறையினரிடம் கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து வருவாய் துறையினர், 8 ஏக்கர் பாறை புறம்போக்கு நிலம் ஒதுக்கீடு செய்து, துணை மின் நிலையம் அமைப்பதற்கு ஒப்புதல் அளித்தனர்.
ஆனால், துணை மின் நிலையம் அமைய உள்ள நிலத்திற்கு செல்வதற்கு, மாநில நெடுஞ்சாலையில் இருந்து, 40 மீட்டர் நீளத்திற்கு தனிநபர் ஒருவரின் பட்டா நிலம் வழியாகத் தான் செல்ல வேண்டும்.
அந்த நிலத்தை தனி நபரிடம் இருந்து பெற்று தருமாறு, மின்வாரிய அதிகாரிகள், மாவட்ட வருவாய் அலுவலரிடம் கோரிக்கை வைத்தனர்.
நேற்று திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் தீபா, தாசில்தார் மதியழகன், மின்வாரிய உதவி பொறியாளர் ராஜேந்திரன் ஆகியோர் சின்னகடம்பூர் துணை மின்நிலையம் இடத்தை ஆய்வு செய்தனர். பின், மாவட்ட வருவாய் அலுவலர், 'விரைவில் துணை மின்நிலையத்திற்கு தேவையான வழிநிலத்தை பெற்று தருவதாக' உறுதியளித்தார்.
தொடர்ந்து, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், திருத்தணி அரசினர் கலைக் கல்லுாரியில், மினி ஸ்டேடியம் அமைப்பதற்கான இடத்தையும் ஆய்வு செய்தார்.