/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஊழியர்கள் மீது தாக்குதல் மின் வாரியத்தினர் ஆர்ப்பாட்டம்
/
ஊழியர்கள் மீது தாக்குதல் மின் வாரியத்தினர் ஆர்ப்பாட்டம்
ஊழியர்கள் மீது தாக்குதல் மின் வாரியத்தினர் ஆர்ப்பாட்டம்
ஊழியர்கள் மீது தாக்குதல் மின் வாரியத்தினர் ஆர்ப்பாட்டம்
ADDED : மே 15, 2024 12:26 AM

திருவள்ளூர்,
திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது போளிவாக்கம் சத்திரம். இந்த நெடுஞ்சாலை, வழியே நேற்று முன்தினம் இரவு சென்ற வாகனம் மின் கம்பத்தில் மோதி குறைந்த அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்தது.
இதுகுறித்து பகுதிவாசிகள் மணவாளநகர் துணை மின் நிலையத்திற்கு தகவல் அளித்தும் முறையான பதில் அளிக்காமல் அலட்சியமாக பதிலளித்தாக கூறப்படுகிறது.
இந்நிலையில் உதவி பொறியாளர் ரமேஷ், மின்பாதை ஆய்வாளர் பழனி, கம்பியாளர் மாரியப்பன் சம்பவ இடத்திற்கு சென்று மின் இணைப்பை துண்டித்தனர்.
தகவலறிந்த போளிவாக்கம் பகுதிவாசிகள் 20க்கும் மேற்பட்டோர் மின்வாரிய ஊழியர்களிடம் உதவி செயற்பொறியாளரை வரச்சொல்லுங்கள் எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் பழனி மற்றும் மாரியப்பன் ஆகிய இருவரும் காயம் அடைந்தனர். இது குறித்து உதவி செயற்பொறியாளர் ஜானகிராமன் கொடுத்த புகாரின்படி, மணவாளநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தகவலறிந்த மின்வாரிய ஊழியர்கள் மணவாளநகர் துணை மின் நிலையத்தில் பணியாளர்களை தாக்கியவர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதனால் நேற்று மதியம் வரை போளிவாக்கம் சத்திரம் பகுதியில் மின்சாரம் இல்லாமல் பகுதிவாசிகள் அவதிப்பட்டு வந்தனர்.

