/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொல்ல முயற்சி
/
பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொல்ல முயற்சி
ADDED : ஆக 09, 2024 11:43 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் ராமர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ், 41. இவருக்கு பார்வதி, 36 என்ற மனைவி, ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
சுரேஷ் திருவள்ளூர் மார்க்கெட்டில் 10 ஆண்டுகளாக காய்கறி கடை வைத்துள்ளார். இந்நிலையில் மார்க்கெட் பகுதியில் சாலையோரம் காய்கறி கடை வைத்திருந்த ராஜேஸ்வரி, 39 என்பவருடன் சுரேஷ் நெருங்கி பழகினார்.
சுரேஷின் மனைவி பார்வதி, ராஜேஸ்வரியிடம் சென்று, எங்கள் காய்கறி கடைக்கு வரக்கூடாது என கூறி தகராறு செய்துள்ளார். ஆனால் அவர்கள் தொடர்பு நீடித்து வந்தது.
நேற்று ராஜேஸ்வரி சுரேஷ் கடைக்கு வந்துள்ளார்.
தகவல் அறிந்த பார்வதி அங்கு வந்து தகராறில் ஈடுபட்டு பெட்ரோலை எடுத்து ராஜேஸ்வரியின் மீது ஊற்றியுள்ளார். அருகில் விளக்கு எரிந்து கொண்டு இருந்ததால் ராஜேஸ்வரியின் உடலில் தீப்பிடித்தது.
அருகிலிருந்தோர் தீயை அணைத்து காயமடைந்த ராஜேஸ்வரியை திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து திருவள்ளூர் நகர போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

