/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மீஞ்சூரில் பெண்ணிடன் செயின் பறிக்க முயற்சி
/
மீஞ்சூரில் பெண்ணிடன் செயின் பறிக்க முயற்சி
ADDED : மார் 14, 2025 11:11 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மீஞ்சூர்:மீஞ்சூர் அடுத்த கேசவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கலாவதி, 28. இவர், நேற்று முன்தினம் இரவு, கேசவபுரம் பஜார் பகுதியில் உள்ள தன் பேக்கரிக்கு நடந்து சென்றார்.
அப்போது, பின்னால் ஹெல்மெட் அணிந்து, பைக்கில் வந்த மர்மநபர், கலாவதியின் கழுத்தில் இருந்த தங்க செயினை பறிக்க முயன்றார்.
சுதாரித்த கலாவதி, 5 சவரன் செயினை கையில் இறுக்கமாக பிடித்துக் கொண்டார். மர்மநபர் மீண்டும் செயினை பறிக்க முயற்சித்தபோது, கீழே விழுந்து லேசான காயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் வருவதை கண்ட மர்மநபர் அங்கிருந்து தப்பினார். மீஞ்சூர் போலீசார் விசாரிக்கின்றனர்.