/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
உயர்கல்வி மாணவர் சேர்க்கை ஒருங்கிணைப்பாளருக்கு விருது
/
உயர்கல்வி மாணவர் சேர்க்கை ஒருங்கிணைப்பாளருக்கு விருது
உயர்கல்வி மாணவர் சேர்க்கை ஒருங்கிணைப்பாளருக்கு விருது
உயர்கல்வி மாணவர் சேர்க்கை ஒருங்கிணைப்பாளருக்கு விருது
ADDED : மே 03, 2024 08:49 PM
திருவள்ளூர்:அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களை உயர் கல்வியில் சேர்ப்பதில், சிறப்பாக செயல்பட்ட திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளருக்கு விருது வழங்கப்பட்டது.
தமிழகத்தில், நான் முதல்வன் திட்டத்தில், அரசு பள்ளிகளில் உயர்கல்வி சேர்க்கை விகிதம் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், உயர்கல்வி பயில 7.5 சதவீத இட ஒதுக்கீடு, புதுமைப்பெண் திட்டம் வாயிலாக, அனைத்து அரசு பள்ளி மாணவர்களையும், உயர்கல்வியில் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.
தமிழகம் முழுதும், பல்வேறு அரசு பள்ளிகளில் 12ம் வகுப்பில் சேர்ந்த 3,99,938 மாணவர்களில் 2,41,177 பேர் பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஷோபாவின் சிறப்பான பணிக்காக, தமிழக பள்ளி கல்வித்துறை விருது வழங்கியது. திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கரிடம் வழங்கி, வாழ்த்து பெற்றார். நிகழ்ச்சியில், முதன்மை கல்வி அலுவலர் ரவிச்சந்திரன், உதவி திட்ட அலுவலர் பாலமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.