/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தொழில்முனைவோருக்கு விழிப்புணர்வு கூட்டம்
/
தொழில்முனைவோருக்கு விழிப்புணர்வு கூட்டம்
ADDED : ஆக 31, 2024 11:10 PM
திருவள்ளூர்: சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைப்பது தொடர்பான, தொழில்முனைவோருடன் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
திருவள்ளூர் மாவட்டத்தில், சிறிய அளவிலான தொழில் பூங்கா அமைப்பது தொடர்பான விழிப்புணர்வு கூட்டம், நடந்தது. தொழில்முனைவோர் பங்கேற்ற கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் தலைமை வகித்து பேசியதாவது:
திருவள்ளூர் மாவட்டத்தில், சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைப்பதை ஊக்குவிக்கும் வகையிலும், உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துவதற்கும் சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைக்க முன்வரும் தொழில் முனைவோருக்கு, 2.50 கோடி ரூபாய் வரை நிதி உதவி தமிழக அரசால் வழங்கப்படும்.
ஜவுளிப்பூங்கா குறைந்த பட்சம் மூன்று தொழிற் கூடங்களுடன் குறைந்தபட்சமாக 2 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்பட வேண்டும். இந்த ஜவுளி பூங்காவில், அடிப்படை வசதிகள் அனைத்தும் இருத்தல் அவசியம்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், துணிநுால் சேலம், மண்டல துணை இயக்குனர் அம்சவேணி, மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் சேகர், உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் அருண்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.