/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
'பி' டிவிஷன் வாலிபால் ஜேப்பியார் சாம்பியன்
/
'பி' டிவிஷன் வாலிபால் ஜேப்பியார் சாம்பியன்
ADDED : ஆக 31, 2024 11:27 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சார்பில், இருபாலருக்கான 'பி' டிவிஷன் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி, எழும்பூரில் நடக்கிறது.
பெண்களில் 16, ஆண்களில் 31 என மொத்தம் 47 அணிகள் பங்கேற்றுள்ளன. பெண்களுக்கான இறுதிப் போட்டியில், ஜேப்பியார் பல்கலை மற்றும் சிவந்தி கிளப் அணிகள் மோதின.
விறுவிறுப்பான போட்டியில், 25 - 23, 18 - 25, 25 - 20 என்ற கணக்கில், ஜேப்பியார் அணி வெற்றி பெற்றது.
மூன்றாம் இடத்திற்கான போட்டியில், தமிழக போலீஸ் அணி, 27 - 25, 25 - 22 என்ற கணக்கில், லைப் ஸ்போர்ட்ஸ் அகாடமி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.