/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆண் குழந்தையின் சடலம் ரயில் நிலையத்தில் பரபரப்பு
/
ஆண் குழந்தையின் சடலம் ரயில் நிலையத்தில் பரபரப்பு
ADDED : மார் 06, 2025 10:49 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி ரயில் நிலைய நான்காவது நடைமேடை அருகே ஒரு வீட்டின் சுற்றுச்சவரை ஒட்டிய பள்ளத்தில், நான்கு வயது மதிக்கத்தக்க ஆண் குழந்தையின் சடலம் ஒன்று கிடந்தது. குழந்தையின் கால் மற்றும் முகத்தில் காயங்கள் இருந்தன. அதை கண்ட ரயில் பயணியர் மற்றும் பகுதிவாசிகள், கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
வழக்கு பதிந்த போலீசார், சடலத்தை கைபற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். குழுந்தையின் உடல் அங்கு எப்படி வந்தது, யவரேனும் குழந்தையை கடத்தி கொலை செய்து, சடலத்தை வீசி சென்றனரா என பல கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.