/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பேருந்து நிலையத்தில் பேனர்கள் பொதட்டூர்பேட்டையில் ஆபத்து
/
பேருந்து நிலையத்தில் பேனர்கள் பொதட்டூர்பேட்டையில் ஆபத்து
பேருந்து நிலையத்தில் பேனர்கள் பொதட்டூர்பேட்டையில் ஆபத்து
பேருந்து நிலையத்தில் பேனர்கள் பொதட்டூர்பேட்டையில் ஆபத்து
ADDED : செப் 04, 2024 02:30 AM

பொதட்டூர்பேட்டை:பொதட்டூர்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பொதட்டூர்பேட்டை, மேல்பொதட்டூர், வாணிவிலாசபுரம், புதுார், சவுட்டூர் உள்ளிட்ட பகுதியில், 30,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
நகரின் நடுவே பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. பேருந்து நிலையத்தில் நிழற்குடை ஒன்றும் உள்ளது. ஆனால், இந்த நிழற்குடை போதுமான அளவிற்கு இல்லை. இதனால், காலை, மாலை நேரத்தில் பயணிகள் மற்றும் மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
காத்திருக்க போதிய இடம் இன்றி பேருந்து நிலையத்தில் திறந்தவெளியில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இந்நிலையில், பேருந்து நிலைய நிழற்குடையை ஆக்கிரமித்து விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு இல்லாத நிலையில், பயணிகளின் தலைக்கு மேலே தொங்கிக்கொண்டுள்ள இந்த பதாகைகள், எந்த நேரத்திலும் கீழே விழ நேரிடலாம்.
இதனால், பயணிகள் அச்சத்தில் தவித்து வருகின்றனர். பாதுகாப்பு கருதி, இந்த விளம்பர பதாகைகளை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.