/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி கோவில் மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் தடுக்க தடுப்பு
/
திருத்தணி கோவில் மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் தடுக்க தடுப்பு
திருத்தணி கோவில் மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் தடுக்க தடுப்பு
திருத்தணி கோவில் மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் தடுக்க தடுப்பு
ADDED : ஆக 18, 2024 11:15 PM

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலுக்கு தினமும் பக்தர்கள் பேருந்து, வேன், கார், ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகனங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். வாகனங்கள் செல்வதற்காக கோவில் நிர்வாகம் மலைப்பாதை அமைக்கப்பட்டுள்ளன.
ஒரே பாதையில் அனைத்து வாகனங்கள் சென்று வருவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
சிரமம்
குறிப்பாக, அரசு விடுமுறை நாட்கள், ஆடிக்கிருத்திகை, ஆடிப்பூரம், பிரம்மோற்சவம், திருப்படித் திருவிழா, ஆங்கில புத்தாண்டு மற்றும் மாதந்தோறும் வரும் கிருத்திகை ஆகிய நாட்களில் மலைப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் நடந்து செல்லும் பக்தர்களும் செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
இதனால் ஒன்றரை கி.மீ., துாரம் கடப்பதற்கு பல மணி கணக்கில் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வந்தனர். மாற்று மலைப்பாதை அமைக்காததால் போக்குவரத்து நெரிசல் என்பது தொடர் கதையாக உள்ளது.
தற்போது கோவில் நிர்வாகம் மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் தவிர்ப்பதற்காக மலைப் பாதையில் நடுவில் இரும்பு 'பேரிகார்டு'கள் அமைத்து, வாகனங்கள் செல்வதற்கு ஒரு பாதையும், இறங்குவதற்கு ஒரு பாதையும் ஏற்படுத்தியுள்ளன.
இதனால் போக்குவரத்து நெரிசல் குறைவதற்கு வாய்ப்புகள் அதிகளவில் உள்ளதாக கோவில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
4 மணி நேரம் மூடல்
திருத்தணி முருகன் கோவிலுக்கு தினமும் தமிழகம் உள்பட பல்வேறு அண்டை மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர். பக்தர்கள் வசதிக்காக காலை, 6:00 மணி முதல் இரவு, 8:45 மணி வரை தொடர்ந்து கோவில் நடை திறந்து தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
இன்று ஆவணி அவிட்டம் பவித்ரா உற்சவம் என்பதால், மதியம், 12:00 மணி முதல் மாலை, 4:00 மணி வரை முருகன் கோவில் நடை திறக்காமல் மூடப்பட்டு இருக்கும்.
அந்த நேரத்தில் கோவிலில் பணிபுரியும் அனைத்து அர்ச்சகர்கள் மற்றும் தலைமை குருக்கள் என, 75க்கும் மேற்பட்டோர் ஆவணி அவிட்டம் ஒட்டி பூநுால் மாற்றம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
மாலை, 4:00 மணிக்கு மேல் கோவில் நடை திறந்து பக்தர்கள் தரிசனத்திற்கு இரவு, 8:45 மணி வரை அனுமதிக்கப்படுவர். மேற்கண்ட தகவலை கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.