/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பொன்னேரி நுாலகத்தில் புத்தக கண்காட்சி
/
பொன்னேரி நுாலகத்தில் புத்தக கண்காட்சி
ADDED : ஜூன் 13, 2024 05:02 PM

பொன்னேரி : பொன்னேரி கிளை நுாலகம் மற்றும் நியூ செஞ்சுரியன் புக் ஹவுஸ் நிறுவனம் சார்பில், புத்தக கண்காட்சி துவங்கப்பட்டது.
பொன்னேரி கிளை நுாலக வாசகர் வட்ட தலைவர் ஜோதீஸ்வரன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், சப்-கலெக்டர் வாகே சங்கேத் பல்வந்த் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று கண்காட்சியை துவக்கி வைத்தார்.
மாவட்ட நுாலக அலுவலர் ராஜேஷ்குமார், நகராட்சி துணைத்தலைவர் விஜயகுமார், வாசகர் வட்ட துணைத்தலைவர் வெல்டன்வாசகர், பொன்னேரி கிளை நுாலக நுாலகர்கள் சங்கர், தியாகராஜன், நள்ளிட்டோர் உடனிருந்தனர்.
கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள புத்தகங்களை சப்-கலெக்டர் வாகே சங்கேத் பல்வந்த் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
இங்கு அரசியல், அறிவியல், வரலாற்று கதைகள், சட்டம் சார்ந்த புத்தகங்கள், பிரபல எழுத்தாளர்களின் கதைகள், கட்டுரைகள், புராணகதைகள் என, 30,000க்கும் அதிகமான புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளன. இவற்றை, பார்வையாளர்கள் ஆர்வமுடன் வந்து பார்த்து, வாங்கி செல்கின்றனர்.
வாசகர்களுக்கு, 10- 30 சதவீதிம் தள்ளுபடி விலையில் புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
வரும் 23ம் தேதி வரை, காலை, 8:00 முதல், இரவு, 8:00 மணிவரை இந்த புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது.***