/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பெண் தற்கொலை வழக்கு 7 மாதத்துக்கு பின் காதலன் கைது..
/
பெண் தற்கொலை வழக்கு 7 மாதத்துக்கு பின் காதலன் கைது..
பெண் தற்கொலை வழக்கு 7 மாதத்துக்கு பின் காதலன் கைது..
பெண் தற்கொலை வழக்கு 7 மாதத்துக்கு பின் காதலன் கைது..
ADDED : ஜூலை 20, 2024 06:23 AM

அம்பத்துார்: கொரட்டூரைச் சேர்ந்தவர்கள் கார்த்திக், 29, ஐஸ்வர்யா, 27 தம்பதி. கடந்த 2019ல் காதலித்து திருமணம் செய்தனர்.
ஆனால், அவர்களுக்கு அடிக்கடி வீண் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த டிச., 3ம் தேதி ஐஸ்வர்யா துாக்கிட்டு தற்கொலை செய்தார். அம்பத்துார் சரக உதவி கமிஷனர் கிரி மற்றும் ஆர்.டி.ஓ., தலைமையில் விசாரணை நடந்தது. தலைமறைவான அவரது கணவர் கார்த்திக்கை தேடி வந்தனர். இந்த நிலையில், வழக்கில் திருப்பம் ஏற்பட்டது.
விசாரணையில் தெரிய வந்ததாவது:
கணவருடன் ஏற்பட்ட மனக்கசப்பில் இருந்த ஐஸ்வர்யா, அடையாறில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.
அங்கு, மண்ணடியில் வசிக்கும் முகமது மர்சூக், 31, மனவிரக்தியில் இருந்த ஐஸ்வர்யாவை தன் வலையில் வீழ்த்தினார். திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் அத்துமீறலிலும் ஈடுபட்டுள்ளார். பின் ஏமாற்றியுள்ளார்.
இதனால் ஐஸ்வர்யா தற்கொலை செய்தது தெரிய வந்தது. ஏழு மாதத்திற்கு பின், முகமது மர்சூக்கை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரிக்கின்றனர்.