/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சோளிங்கர் கோவிலில் ஏப்.,14ல் பிரம்மோற்சவம் துவக்கம்
/
சோளிங்கர் கோவிலில் ஏப்.,14ல் பிரம்மோற்சவம் துவக்கம்
சோளிங்கர் கோவிலில் ஏப்.,14ல் பிரம்மோற்சவம் துவக்கம்
சோளிங்கர் கோவிலில் ஏப்.,14ல் பிரம்மோற்சவம் துவக்கம்
ADDED : ஏப் 08, 2024 07:15 AM
சோளிங்கர் : ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த கொண்டபாளையத்தில் அமைந்துள்ளது யோக நரசிம்மர் மலைக்கோவில். யோக நரசிம்மரின் உற்சவ மூர்த்தியான பக்தோசித பெருமாள், சோளிங்கர் நகரில் அருள்பாலித்து வருகிறார். 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக இந்த தலத்திற்கு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்கர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
பக்தோசித பெருமாள் கோவில் சித்திரை பிரம்மோற்சவம் வரும் 14ம் தேதி துவங்குகிறது.
சித்திரை முதல் தேதியான ஏப்., 14ம் தேதி மாலை பக்தோசித பெருமாள், மலைக்கோவிலுக்கு எழுந்தருளுகிறார்.
அன்று இரவு 7:00 மணிக்கு அங்குரார்ப்பணம் நடைபெறும். பெரிய மலையில் ஏப்., 15ம் தேதி 5:00 மணிக்கு கொடியேற்றம் நடைபெறும்.
மாலை 4:30 மணிக்கு ஊர்க்கோவிலுக்கு சுவாமி திரும்புகிறார். ஏப்., 16ம் தேதி சேஷ வாகனம், சிம்ம வாகனம் 17ம் தேதி அம்ச வாகனம் என தொடர்ந்து தினசரி பல்வேறு வாகனங்களில் பெருமாள் எழுந்தருளுகிறார்.
தங்க கருட சேவை 19ம் தேதி நடைபெறும். பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா, ஏப்., 21ம் தேதி நடக்கிறது. அன்று இரவு ராஜா தோட்டத்தில் திருமஞ்சன மண்டகப்படி நடைபெறும். ஏப்., 28ம் தேதி கண்ணாடி பல்லக்கு உற்சவத்துடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.

