/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
/
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
ADDED : ஆக 12, 2024 06:58 AM

கடம்பத்துார்: கடம்பத்துார் ஒன்றியம் பிஞ்சிவாக்கம் ஊராட்சிக்குட்பட்ட கிறிஸ்துகண்டிகை பகுதி.
இங்கு பகுதிவாசிகள் பயன்பாட்டிற்காக கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த குடிநீர் தொட்டி முறையான பராமரிப்பு இல்லாததால் ஆங்காங்கே சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.
மேலும் குழாய் சேதமடைந்து குடிநீரும் பலமாதங்களாக வீணாகி வருகிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் ஊராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட ஒன்றிய அதிகாரிகள் கிறிஸ்துகண்டிகை பகுதியில் ஆய்வு செய்து மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டியை சீரமைக்க வேண்டுமென பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.