/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
எரிந்த நிலையில் பெண் சடலம் மீட்பு
/
எரிந்த நிலையில் பெண் சடலம் மீட்பு
ADDED : மே 04, 2024 11:43 PM

பொன்னேரி:பொன்னேரி அடுத்த கூடுவாஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் சேகர் மனைவி கற்பகம், 50. இவரது மகன், நவீன், சென்னையில் தனியார் ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு, கற்பகம் வீட்டில் துாங்கிக்கொண்டிருந்தார். நள்ளிரவு, 2:00 மணிக்கு மகன் நவீனிடம் தண்ணீர் கேட்டு குடித்து விட்டு மீண்டும் துாங்கி உள்ளார்.
இந்நிலையில் அதிகாலை கற்பகம் தீயில் கருகி எரிந்த நிலையில், வீட்டின் அருகில் உள்ள குளம் அருகே சடலமாக இருப்பதை கண்டு, கிராமவாசிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
பொன்னேரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சென்னையில் பணியாற்றி வரும் மகன் நவீன், அங்கு ஒரு பெண்ணை காதலித்து வருவதாகவும், தாய் கற்பகத்தை தன்னுடன் சென்னைக்கு வரும்படியும் தெரிவித்து உள்ளார்.
இதற்கு கற்பகம் மறுப்பு தெரிவித்த வந்த நிலையில், தீ வைத்து தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரிந்தது.
சடலத்தை கைப்பற்றி பொன்னேரி போலீசார் விசாரிக்கின்றனர்.