/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலை நடுவில் நிறுத்தும் பஸ்களால் திருவள்ளூரில் போக்குவரத்து பாதிப்பு
/
சாலை நடுவில் நிறுத்தும் பஸ்களால் திருவள்ளூரில் போக்குவரத்து பாதிப்பு
சாலை நடுவில் நிறுத்தும் பஸ்களால் திருவள்ளூரில் போக்குவரத்து பாதிப்பு
சாலை நடுவில் நிறுத்தும் பஸ்களால் திருவள்ளூரில் போக்குவரத்து பாதிப்பு
ADDED : பிப் 25, 2025 12:49 AM

திருவள்ளூர்,திருவள்ளூரில் சாலை நடுவிலேயே பேருந்துகளை நிறுத்தி பயணியரை ஏற்றுவதால் போக்குவரத்து பாதிக்கிறது.
திருவள்ளூரில், ஜே.என்.சாலை, சி.வி.நாயுடு சாலை மற்றும் செங்குன்றம் சாலைகள் பிரதான போக்குவரத்திற்கு பயன்படுகிறது.
இதில், ஜே.என்.சாலை மற்றும் சி.வி.நாயுடு சாலையில், திருப்பதி, திருத்தணி மார்க்கத்தில் செல்லும் வாகனங்கள் சென்று வருவதால், எப்போதும் போக்குவரத்து அதிகளவில் இருக்கும்.
இந்த நிலையில், பேருந்துகள், ஆட்டோக்கள் என பயணியர் வாகனங்கள் அனைத்தும் சாலை நடுவிலேயே நின்று, பயணியரை ஏற்றி, இறக்கிச் செல்கின்றன. இதன் காரணமாக பின்னால் வரும் மற்ற வாகனங்கள், நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன. பேருந்து அல்லது ஆட்டோக்கள் புறப்பட்டதும் தான் மற்ற வாகனங்கள் மேற்கொண்டு செல்ல முடிகிறது.
அதற்குள், மேலும் பல வாகனங்கள் வரிசையில் சேர்ந்து விடுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
சிறிது நேரம் நெரிசல் ஏற்பட்டால் போக்குவரத்து சீராவதற்கு பல மணி நேரம் ஆகிறது.
எனவே, போக்குவரத்து போலீசார் நெரிசல் மிகுந்த இடங்களில் பணியில் ஈடுபட்டு, சாலை நடுவில் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க வேண்டும் என, நகரவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.