/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணியில் புறவழிச்சாலை பணி விறுவிறு மே மாதத்தில் பயன்பாட்டிற்கு திறப்பு
/
திருத்தணியில் புறவழிச்சாலை பணி விறுவிறு மே மாதத்தில் பயன்பாட்டிற்கு திறப்பு
திருத்தணியில் புறவழிச்சாலை பணி விறுவிறு மே மாதத்தில் பயன்பாட்டிற்கு திறப்பு
திருத்தணியில் புறவழிச்சாலை பணி விறுவிறு மே மாதத்தில் பயன்பாட்டிற்கு திறப்பு
ADDED : ஏப் 25, 2024 01:25 AM

திருத்தணி:திருத்தணி நகரில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளை தவிர்ப்பதற்காக, சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், திருத்தணி அடுத்த பட்டாபிராமபுரம் பகுதியில் இருந்து, திருத்தணி-- - அரக்கோணம் மாநில நெடுஞ்சாலை வள்ளியம்மாபுரம் பகுதிக்கு, 36 கோடி ரூபாய் மதிப்பில், 10 ஆண்டுகளாக புறவழிச்சாலை பணி நடந்து வருகிறது.
இதில் தார்ச்சாலை பணிகள், நந்தியாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலப் பணிகள் முடிந்த நிலையில், எம்.ஜி.ஆர்., நகரில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள், கடந்த மூன்று மாதங்களுக்கு முன் முடிவடைந்தது.
ஆனால், ரயில்வே மேம்பாலத்திற்கும், நெடுஞ்சாலை துறையின் உயர்மட்ட பாலத்திற்கும், இணைப்பு பாலப் பணிகள் கிடப்பில் போடப்பட்டது.
இதுகுறித்து நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, திருத்தணி நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் இணைப்பு பாலப் பணிகளுக்கு, 'டெண்டர்' விடப்பட்டு, கடந்த மாதம் பணி துவங்கியது.
தற்போது, ரயில்வே தண்டவாளத்தின் ஒருபுறம் மட்டும் நெடுஞ்சாலை துறையினர் இணைப்பு பாலம் அமைக்கப்பட்டது. மற்றொரு புறம் உள்ள இணைப்பு பாலம் அமைப்பதற்கு, ஜே.சி.பி., இயந்திரம் மூலம் மண்கொட்டி நிரப்பும் பணிகள், தற்போது துரித வேகத்தில் நடந்து வருகிறது.
இதுகுறித்து திருத்தணி நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் ரகுராமன் கூறுகையில், “ரயில்வே மேம்பாலத்திற்கு ஒருபுறம் இணைப்பு பாலம் பணிகள் முடிந்துள்ளன. மற்றொரு புறம் இணைப்பு பாலம் அமைக்கும் பணிகள் துரித வேகத்தில் நடந்து வருகிறது.
“மே மாதம் அல்லது ஜூன் மாதம் முதல் வாரத்தில் இருந்து புறவழிச்சாலை பணிகள் முழுமையாக முடிந்து வாகன ஓட்டிகள் பயன்பாட்டிற்கு விடப்படும்,” என்றார்.

