/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தொழில்முனைவோர் விருது விண்ணப்பிக்க அழைப்பு
/
தொழில்முனைவோர் விருது விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : ஆக 03, 2024 01:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:சுற்றுலா தொழில்முனைவோர் விருதுக்கு இணையத்தில் விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, தமிழகத்தில் சுற்றுலா தொழில்முனைவோருக்கு, விருது வழங்கப்பட உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தொழில்முனைவோர், www.tntourismawards.com என்ற இணையதளத்தில், வரும் 20க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு திருவள்ளூர் மாவட்ட சுற்றுலா அலுவலரை, நேரிலோ, 73977 15675 என்ற மொபைல் எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.