/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அமைப்பு சாரா தொழிலாளர் பதிவு புதுப்பிக்க அழைப்பு
/
அமைப்பு சாரா தொழிலாளர் பதிவு புதுப்பிக்க அழைப்பு
ADDED : ஆக 09, 2024 12:52 AM
திருவள்ளூர்,:திருவள்ளூர் மாவட்டத்தில் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினர்கள் புதுப்பிக்க விண்ணப்பிக்கலாம்.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
தமிழக சீர்மரபினர் நலவாரிய உறுப்பினர்களுக்கு, விபத்து ஈட்டுறுதி, இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை, ஈமச்சடங்கு, கல்வி, திருமணம், மகப்பேறு, மூக்கு கண்ணாடி, முதியோர் ஓய்வூதியம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
சீர்மரபினர் இனத்தைச் சார்ந்த, 18-60 வயதுக்கு உட்பட்டோர், அமைப்பு சாரா நிறுவனங்களில் பணிபுரியாத குடும்பத்தில் ஒருவர் இந்த வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து நலத்திட்ட உதவிகள் பெற விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.
ஏற்கனவே உறுப்பினராக பதிவு செய்தோர், தங்கள் உறுப்பினர் பதிவை விரைவில் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். கூடுதல் தகவலுக்கு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.