/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஓட்டுக்கு பணம் வினியோகம் தி.மு.க.,வினர் மீது வழக்கு
/
ஓட்டுக்கு பணம் வினியோகம் தி.மு.க.,வினர் மீது வழக்கு
ஓட்டுக்கு பணம் வினியோகம் தி.மு.க.,வினர் மீது வழக்கு
ஓட்டுக்கு பணம் வினியோகம் தி.மு.க.,வினர் மீது வழக்கு
ADDED : ஏப் 17, 2024 09:33 PM
பள்ளிப்பட்டு,:பள்ளிப்பட்டு அடுத்த வெளிகரம் பகுதியில், நேற்று முன்தினம் இரவு வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்யப்பட்டு வருவதாக, வருவாய் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு திருத்தணி துணை வட்டாட்சியர் திருவேங்கடம் விரைந்து சென்றார். அப்போது, அந்த பகுதியில், தி.மு.க., மாவட்ட விவசாய பிரிவு அமைப்பாளர் வெங்கட பெருமாள் மற்றும் தி.மு.க., உறுப்பினர் பாபு ஆகியோர், வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்து வந்தது தெரியவந்தது.
அவர்களிடம் இருந்து, 9,500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து துணை வட்டாட்சியர் திருவேங்கடம், பள்ளிப்பட்டு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.