/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வீட்டை சேதப்படுத்திய நால்வர் மீது வழக்கு
/
வீட்டை சேதப்படுத்திய நால்வர் மீது வழக்கு
ADDED : செப் 14, 2024 08:21 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமரன், 48. இவரிடம் இதே பகுதியைச் சேர்ந்த சத்தியராஜ் என்பவர் 3 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.
முத்துக்குமரன் மனைவி ரஞ்சனி, 43 என்பவர் தன் மகனின் படிப்பிற்காக கொடுத்த பணத்தை சத்தியராஜிடம் கேட்டுள்ளார். பணத்தை கொடுக்க காலதாமதம் ஆனதால் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த சத்தியராஜ் அவரது மனைவி சாருமதி, உறவினர்கள் சரண்யா, பூங்கொடி ஆகியோர் கடந்த 12ம் தேதி மாலை முத்துக்குமரன் வீட்டிற்கு சென்று ஆபாசமாக பேசி வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி அவரது மனைவி ரஞ்சனி மற்றும் மகன் அன்புசெல்வனை தாக்கியுள்ளனர்.
ரஞ்சனி கொடுத்த புகாரின்படி திருவள்ளூர் நகர போலீசார் சத்தியராஜ், சாருமதி, சரண்யா, பூங்கொடி ஆகிய நால்வர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.