/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சிறுமி திருமணம் நால்வர் மீது வழக்கு
/
சிறுமி திருமணம் நால்வர் மீது வழக்கு
ADDED : மார் 13, 2025 10:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:திருத்தணி ஒன்றியத்தை சேர்ந்த, 17 வயது சிறுமிக்கும், நெட்டேரி கண்டிகை சேர்ந்த தினகரன், 25 என்பவருக்கும் கடந்த, 9 ம் தேதி பெற்றோர் முன்னிலையில் திருமணம் நடந்தது.
இது குறித்து தகவல் அறிந்த திருத்தணி ஒன்றிய விரிவாக்க அலுவலர் ராஜேஸ்வரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிந்து தினகரன், அவரது உறவினர்கள் கோவிந்தராஜிலு,40, பிரியதர்ஷினி,35, கன்னியம்மாள்,38 ஆகியோர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.