/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நெடுஞ்சாலையில் கால்நடைகள் உலா வேகம் குறைந்து தவிக்கும் வாகனங்கள்
/
நெடுஞ்சாலையில் கால்நடைகள் உலா வேகம் குறைந்து தவிக்கும் வாகனங்கள்
நெடுஞ்சாலையில் கால்நடைகள் உலா வேகம் குறைந்து தவிக்கும் வாகனங்கள்
நெடுஞ்சாலையில் கால்நடைகள் உலா வேகம் குறைந்து தவிக்கும் வாகனங்கள்
ADDED : மே 10, 2024 01:02 AM

கடம்பத்துார், திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது போளிவாக்கம் ஊராட்சி. இந்த நெடுஞ்சாலையில் அரசு, தனியார், பள்ளி, கல்லுாரி, தொழிற்சாலை பேருந்து என, தினமும் 20,000த்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
இப்பகுதி வீடுகளில் வளர்க்கப்படும் கால்நடைகள், நெடுஞ்சாலையில் உலா வருகின்றன. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, சில நேரங்களில் விபத்துக்களும் ஏற்படுகிறது.
நெடுஞ்சாலையில் கால்நடைகள் உலா வருவதை கட்டுப்படுத்த, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டும், அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, வாகன ஓட்டிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் நெடுஞ்சாலையில் உலா வரும் கால்நடைகளை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.