/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலையில் உலாவரும் கால்நடைகள் சிரமத்தில் வாகன ஓட்டிகள்
/
சாலையில் உலாவரும் கால்நடைகள் சிரமத்தில் வாகன ஓட்டிகள்
சாலையில் உலாவரும் கால்நடைகள் சிரமத்தில் வாகன ஓட்டிகள்
சாலையில் உலாவரும் கால்நடைகள் சிரமத்தில் வாகன ஓட்டிகள்
ADDED : ஆக 07, 2024 02:33 AM

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியத்தில் திருப்பாச்சூர் - கொண்டஞ்சேரி,மணவாளநகர் - ஸ்ரீபெரும்புதுார், தண்டலம் - அரக்கோணம் ஆகிய நெடுஞ்சாலையில் உலாவரும் கால்நடைகளால் வாகன ஒட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
சில நேரங்களில் விபத்தில் சிக்கி பலியாகி வருகின்றனர். சில இடங்களில் நெடுஞ்சாலையோரம் மாட்டுத்தொழுவமாகவே மாறியுள்ளது.
கலெக்டர், எஸ்.பி. உத்தரவிட்டும் நெடுஞ்சாலையில் உலா வரும் கால்நடைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கட்டுப்படுத்துவதில் அலட்சியம் காட்டி வருகின்றனர்.
கடந்த ஒரு மாதத்தில் மணவாள நகர் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில் மேல்நல்லாத்துார் பகுதியில் மட்டும் ஐந்து மாடுகள் பலியாகியுள்ளது.
எனவே, மாவட்ட நிர்வாகம் நெடுஞ்சாலையில் உலாவரும் கால்நடைகளை கட்டுப்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.