/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலையில் திரியும் கால்நடைகள் காற்றில் பறக்கும் உத்தரவு
/
சாலையில் திரியும் கால்நடைகள் காற்றில் பறக்கும் உத்தரவு
சாலையில் திரியும் கால்நடைகள் காற்றில் பறக்கும் உத்தரவு
சாலையில் திரியும் கால்நடைகள் காற்றில் பறக்கும் உத்தரவு
ADDED : நவ 09, 2024 01:47 AM

பொன்னேரி,:பொன்னேரி - மீஞ்சூர், பொன்னேரி -பழவேற்காடு சாலையில், தொடர் வாகன போக்குவரத்து இருக்கிறது. வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், கால்நடைகள் சுற்றித்திரிகின்றன. இவை சாலை நடுவிலும், குறுக்கிலும் பயணிக்கும்போது வாகன ஓட்டிகள் நிலை தடுமாறுகின்றனர்.
இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் அவற்றின் மீது மோதுவதை தவிர்க்கும்போது, நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்துக்களில் சிக்குகின்றனர்.
கால்நடைகளை, அவற்றின் உரிமையாளர்கள் வீடுகளில் வைத்து பராமரிக்க வேண்டும் எனவும், சாலைகளில் திரியவிட்டால், 2,000 ரூபாய்அபராதம் விதிக்கப்படும் எனவும் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
அந்தந்த பகுதி உள்ளாட்சி நிர்வாகங்கள் மற்றும் வருவாய்த்துறையினர் இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
ஆனால், மேற்கண்ட சாலைகளில் கால்நடைகள் சுற்றித்திரிவதும், போக்குவரத்திற்கு இடையூறாக படுத்துறங்குவதமாக இருப்பது தொடர்கிறது.
அதிகாரிகளின் கண்காணிப்பு இல்லாததால், மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவும் காற்றில் பறக்கிறது. சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளால் வாகன ஒட்டிகள் தினம் தினம் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
மாவட்ட நிர்வாகம் உரிய அறிவுறத்தல்களை வழங்கி, சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.