/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலையில் திரியும் கால்நடைகள் விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள் வளைவு சாலையில் எச்சரிக்கை இல்லை வாகன ஓட்டிகள் தடுமாற்றம்

ADDED : ஏப் 02, 2024 05:36 AM

திருவாலங்காடு: கனகம்மாசத்திரம் -- தக்கோலம் நெடுஞ்சாலையில் இரவில் சாலையில் திரியும் கால்நடைகளால், வாகன ஓட்டிகள் பீதியடைந்துள்ளனர்.
கனகம்மாசத்திரம் -- தக்கோலம் மாநில நெடுஞ்சாலை வழியாக தினமும், 30,000த்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை என பல்வேறு நகரங்களுக்கு சென்று வருகின்றன.
திருவாலங்காடு ரயில் நிலையத்தில் இருந்து வேலைக்கு சென்னை, திருவள்ளூர் செல்வோர் அதிகம். அவர்கள் பெரும்பாலும் இருசக்கர வாகனத்தில் சென்று வருகின்றனர்.
இந்நிலையில் சின்னகளக்காட்டூர் பகுதியில், இரவில் நெடுஞ்சாலையிலேயே கால்நடைகள் ஜாலியாக உலா வருகின்றன. இவ்வாறு வரும் கால்நடைகள், சாலை நடுவில் கும்பலாக அமர்ந்து கொள்ளும். திடீரென எழுந்து, சாலையின் குறுக்கே வரும்.
அப்போது, சாலையில் இரவில் வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி, விபத்திற்கு உள்ளாகின்றனர். சாலையில் திரியும் கால்நடைகளை, பிடித்து, அவற்றின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்களும், வாகன ஓட்டிகளும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
l சோழவரம் அடுத்த அழிஞ்சிவாக்கம் கிராமத்தில் இருந்து இருளிப்பட்டு, ஜெகன்னாதபுரம் வழியாக மேட்டுப்பாளையம் செல்லும் மாலையில், அகரம், கங்கையாடிகுப்பம், குதிரைப்பள்ளம் ஆகிய கிராமங்களில், வளைவு பகுதிகள் அதிகமாக உள்ளன.
இதில், அகரம் கிராமம் அருகே, உள்ள நெடுஞ்சாலை, அதிக வளைவுகளுடன் இருக்கிறது. வளைவு பகுதியில் தனியார் கட்டடத்தின் சுற்று சுவர் ஒன்றும் இருப்பதால், எதிரில் வரும் வாகனங்கள் குறித்து தெரிந்து கொள்ள முடியாத நிலை உள்ளது.
வளைவுப்பகுதிகளில் எந்தவொரு எச்சரிக்கை பலகை, சாலையோர தடுப்புகள், ஒளிரும் விளக்குகள் பொருத்தப்படாமல் உள்ளன. இந்த சாலையானது, சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலை மற்றும், பொன்னேரி - மீஞ்சூர் மாநில நெடுஞ்சாலையை இணைக்கும் சாலையாக இருக்கிறது.
தொடர் வாகன போக்குவரத்து உள்ள நிலையில், அசம்பாவிதங்கள் நேரிடும் முன், மேற்கண்ட வளைவு பகுதிகளில் தேவையான, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.